AI கற்று தர ஆசிரியர்களே இல்லை.. குழந்தைகள் படிப்பில் பெற்றோர் கவனிக்க வேண்டியது என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مايو 26، 2025

Comments:0

AI கற்று தர ஆசிரியர்களே இல்லை.. குழந்தைகள் படிப்பில் பெற்றோர் கவனிக்க வேண்டியது என்ன?



AI கற்று தர ஆசிரியர்களே இல்லை.. குழந்தைகள் படிப்பில் பெற்றோர் கவனிக்க வேண்டியது என்ன?

தமிழகத்தில் ஏஐ கற்று தர ஆசிரியர்களே இல்லை.. குழந்தைகள் படிப்பில் பெற்றோர் கவனிக்க வேண்டியது என்ன?

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், அடுத்ததாக எந்த வழியில் செல்லலாம் என்பதே மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் யோசனையாக உள்ளது. அந்த வகையில் பெரும்பாலான மாணவர்களின் பாதை பொறியியலாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பில் இணைகின்றனர்.

இந்த நிலையில் பொறியியல் படிப்பில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கு முன்பாக பெற்றோர் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக கல்வியாளர் நெடுஞ்செழியன் சில அறிவுரைகளை அளித்துள்ளார். அதில் நெடுஞ்செழியன் பேசுகையில், பெற்றோரும், மாணவர்களும் ஒரு மோகத்தில் ஏஐ தொழிற்நுட்பம், டேட்டா சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்று விழுகிறார்கள். ஏஐ படிப்புகள்

நீங்கள் அவசர அவசரமாக விழும் போது, அந்த கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்து கொள்ள வேண்டும். ஏஐ தொழிற்நுட்பத்தை கற்றுக் கொடுப்பதற்கு ஆசிரியர்களே கிடையாது. ஆசிரியர்கள் இல்லாத போது, மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்யும் போது, எந்த நோக்கமும் இல்லாமல் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.

ஆசிரியர்களே இல்லை

ஏனென்றால் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அதிகளவிலான மாணவர்களை பிடித்து வருவதற்கு தான் ஆசிரியர்களை, ஏஜெண்ட்களை அனுப்புகிறார்கள். ஆசிரியர்களை கற்க வைத்து, மாணவர்களை வழிநடத்தக் கூறும் கல்லூரிகளை விடவும், ஆள் பிடிப்பதற்கு ஆசிரியர்களை அனுப்பும் கல்லூரிகளே அதிகம்.

தகுதியுடன் இருக்க வேண்டும்

ஆசிரியர்கள் இல்லாமல் ஏஐ தொழிற்நுட்பம் சார்ந்த படிப்புகளில் சேர்ந்தால், 4 ஆண்டுகளுக்கு பின் வேலையில்லாமல் நிற்க வேண்டிய நிலை உருவாகும். தொழிற்நுட்ப வளர்ச்சி அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் போது, அதற்கேற்ப நாம் கற்று அறிந்திருக்க வேண்டும். நிறுவனத்தில் வேலை செய்வதற்கான தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும். கற்றலில் வேகம் தேவை

அதற்கேற்ப டிகிரி உதவியாக இருக்க வேண்டும். வரும் காலங்களில் மனிதர்களுடன் யாரும் போட்டி போடப் போவதில்லை. இயந்திரங்களுடன் போட்டி போடும் போது, திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.அதேபோல் அதீத வேகத்தில் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், அந்த சிஸ்டம் நம்மை புறந்தள்ளிவிடும்.

பெற்றோர் பார்க்க வேண்டியது?

அதேபோல் ஏஐசிடிஇ இணையதளத்தை ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டும். அதில் ஒவ்வொரு கல்லூரிக்கும் அண்ணா பல்கலைக்கழகம் எத்தனை சீட் ஒதுக்கீடு செய்திருக்கிறது என்பது தெரியும். மற்ற சீட்கள் அனைத்து மேனேஜ்மெண்ட் மூலமாக நிரப்பப்படுவதுதான். அதேபோல் ஒவ்வொரு கல்லூரியின் முடிவுகளை சோதனை செய்ய வேண்டும்.

வெளிப்படைத்தன்மை இல்லை

ஒவ்வொரு செமஸ்டரிலும் எத்தனை மாணவர்கள் பாஸ் செய்கிறார்கள், எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அதேபோல் கல்லூரி இறுதியாண்டில் உள்ள மாணவர்களிடம் சென்று சில கேள்விகளை எழுப்ப வேண்டும். எந்த கல்லூரியும் வெளிப்படையாக மாணவர்கள் வேலைவாய்ப்புடன் செல்கிறார்கள் என்பதை சொல்வதில்லை. இதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة