ரேஷன் கார்டு தொலைஞ்சு போய்டுச்சா? இனி கவலையே வேண்டாம்….வீடு தேடி வரும்!
மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு.
எனவே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி பருப்பு சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு ரேஷன் கார்டு மிகவும் முக்கிய ஆவணமாகும். தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடும்ப அட்டை தொலைந்து விட்டால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், மாநகராட்சியில் துணை ஆட்சியர் அலுவலகத்திற்கும் அலைய வேண்டிய நிலை உள்ளது. மேலும் புதிய அட்டை வந்துவிட்டதா என்று பார்ப்பதற்கு இரண்டு அல்லது 3 முறை வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அலைய வேண்டும். எனவே தொலைந்து போன அட்டைக்கு பதிலாக நகல் அட்டையை ஆன்லைன் மூலம் பெறுவதற்கான திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் 50 ரூபாய் பணம் கட்டினால் அஞ்சல் துறை மூலமாக வீடுகளுக்கே அந்த அட்டையானது வந்து சேரும். இந்த திட்டத்தின் மூலமாக 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொலைந்து போன அட்டைக்கு பதிலாக புதிய அட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.