Decision to appoint temporary Tamil teachers in Kendriya Vidyalaya schools
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிகமாக தமிழ் ஆசிரியர்களை நியமிக்க முடிவு
தமிழகத்தில் மும்மொழி கொள்கை தேவையில்லை என இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கிடையே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் மத்திய அரசின் 34 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை என தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலன் பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட இந்த தகவல் மூலம், தமிழக மாணவர்கள் பயிலும் பள்ளிகளில், தாய்மொழி தமிழை கற்றுக்கொடுக்க ஒரு ஆசிரியர் கூட அந்த பள்ளிகளில் இல்லை. அதேவேளையில், மிகவும் சொற்பமான நபர்கள் மட்டுமே பேசுவதாக ஆய்வறிக்கைகள் கூறும் சமஸ்கிருதம் மொழியை பயிற்றுவிக்க 15 ஆசிரியர்களும், இந்தி மொழியை பயிற்றுவிக்க 52 ஆசிரியர்களும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் இருப்பது உறுதியானது. இது மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு ஒரு உதாரணம் என தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன.
இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை ஒப்பந்த முறையில் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியானது. அதன்படி தமிழ் உட்பட பல்வேறு பாடங்களுக்கும், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு கடந்த மாதம் 24-ம் தேதி நேரடி நேர்காணல் நடத்தப்பட்டது
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கேந்தரியா வித்யாலயா பள்ளி மற்றும் இலுப்பைக்குடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றைய செய்தித்தாளில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الأحد، مارس 02، 2025
Comments:0
Home
Kendriya School Admission
Kendriya Schools
Kendriya Vidyalaya schools
temporary post
temporary posts
temporary teacher posts
temporary TEACHERS
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிகமாக தமிழ் ஆசிரியர்களை நியமிக்க முடிவு
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிகமாக தமிழ் ஆசிரியர்களை நியமிக்க முடிவு
Tags
# Kendriya School Admission
# Kendriya Schools
# Kendriya Vidyalaya schools
# temporary post
# temporary posts
# temporary teacher posts
# temporary TEACHERS
temporary TEACHERS
التسميات:
Kendriya School Admission,
Kendriya Schools,
Kendriya Vidyalaya schools,
temporary post,
temporary posts,
temporary teacher posts,
temporary TEACHERS
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.