கே.வி பள்ளிகளில் 24 பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் தமிழ் கற்பிப்பு- தர்மேந்திர பிரதான் பதில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مارس 24، 2025

Comments:0

கே.வி பள்ளிகளில் 24 பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் தமிழ் கற்பிப்பு- தர்மேந்திர பிரதான் பதில்

Tamil teaching in KV schools through 24 part-time teachers - Dharmendra Pradhan reply - கே.வி பள்ளிகளில் 24 பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் தமிழ் கற்பிப்பு- தர்மேந்திர பிரதான் பதில்

தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க 24 ஆசிரியர்கள் பகுதி நேரமாக பணிபுரிகின்றனர். தமிழ் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு TVA அகாடமி மூலம் கற்பிக்கப்படுகிறது.

பாராளுமன்ற கூட்டத்தில் கேந்திரிய வித்யாலயாவில் தமிழ், இந்தி, சமஸ்கிருத ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்து கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார்.

கனிமொழி எம்.பி கேட்ட கேள்விக்கு தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க 24 ஆசிரியர்கள் பகுதி நேரமாக பணிபுரிகின்றனர் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக 21 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு TVA அகாடமி மூலம் கற்பிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 86 இந்தி, 65 சமஸ்கிருத ஆசிரியர்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றுகின்றனர்.

தமிழ்நாட்டில் 21,725 பள்ளிகளில் ஒரு மொழி மட்டும் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 35,092 பள்ளிகளில் இரு மொழி, 1,905 பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிக்கப்படுகிறது என்றார்.



Which mother tongue are you saving through KV schools..? Or teaching..? Kanimozhi MP. Question - கே.வி. பள்ளிகள் மூலம் எந்த தாய்மொழியைக் காப்பாற்றுகிறீர்கள்..? அல்லது கற்றுக் கொடுக்கிறீர்கள்..? கனிமொழி எம்.பி. கேள்வி

எந்த தாய்மொழியை வளர்க்கிறீர்கள்..?

கே.வி. பள்ளிகள் மூலம் எந்த தாய்மொழியைக் காப்பாற்றுகிறீர்கள்..? அல்லது கற்றுக் கொடுக்கிறீர்கள்..? கனிமொழி எம்.பி. கேள்வி

இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாக ஒன்றிய பாஜக அரசு கூறுகிறது; அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ, சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா..?

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة