Last day for exams - important instructions to all head teachers.
தேர்வு முடியும் கடைசி நாள் - தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய உத்தரவு.
தேர்வு முடியும் கடைசி நாளன்று மாணவர்கள் அமைதியாக பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல உள்ளூர் காவல் நிலையங்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும் - அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை.
தமிழகத்தில் மாணவ, மாணவியர்களுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த 3-ந்தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள், மே மாதம் 5-ந்தேதி வெளியாக உள்ளன. முன்னதாக பள்ளிக்கல்வி வாழ்க்கையின் இறுதியான பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த மகிழ்ச்சியை, பள்ளி மாணவ, மாணவியர்கள் சக மாணவ, மாணவியர்களுடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்வர். குறிப்பாக, வண்ண கலர்களை பூசிக்கொண்டும், பேனா மை தெளித்து விளையாடியும் மகிழ்வர். சில நேரங்களில், மாணவர்கள் விதிமுறையை மீறிய செயல்களிலும் ஈடுபடுவர்.
இந்நிலையில் பொதுத்தேர்வு முடிந்த நாளன்று, மாணவ, மாணவியர்கள் அமைதியாக பள்ளி வளாகத்தை விட்டு செல்ல வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளூர் காவல் நிலையங்கள் மூலம் போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அமர்த்திட தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.