5 ஆண்டு மேலாண்மைப் படிப்புகளுக்கான ஜிப்மேட் தேர்வு: விண்ணப்பங்கள் திருத்தம் எப்போது? - JIPMAT exam for 5-year management courses: When are the applications revised?
மேலாண்மைப் படிப்புகளுக்கான ஜிப்மேட் நுழைவுத் தேர்வுக்குரிய விண்ணப்பங்களில் நாளை (மார்ச் 19) முதல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று என்டிஏ அறிவுறுத்தியுள்ளது.
நம் நாட்டில் புத்தகயா மற்றும் ஜம்மு நகரங்களில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) எம்பிஏ, பிஜிபி உட்பட ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர ஜிப்மேட் என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜிப்மேட் நுழைவுத் தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 26-ம் தேதி மதியம் 3 முதல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள என்டிஏ தற்போது வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் exams.nta.ac.in/JIPMAT என்ற வலைத்தளம் மூலம் நாளை முதல் மார்ச் 21-ம் தேதி விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்துக் கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது jipmat@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.