மாணவனை தேர்வெழுத அழைத்த தலைமைஆசிரியர் மீது தாக்குதல் Headmaster attacked for inviting student to take exam
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று தொடங் கியது.
இந்நிலையில், 10ம் வகுப்பில் பாதியில் நின்ற மாணவர்களை கண்ட றிந்து, அவர்களை பொதுத் தேர்வு எழுத வைக்க வேண்டும். என அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரட்டவாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் தலை மை ஆசிரியராக பணிபுரி பவர் சதாசிவம். அடாவடி நபர் கைது .
இப்பள்ளியில் 10ம் வகுப்பில் பாதியில் நின்ற பொரசப்பட்டு கிராமத்தைச் 'சேர்ந்த மாணவனைத் தேடி, அதே பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுடன் சதாசிவம் நேற்று முன் தினம் மதியம் அவனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது அந்த மாண வன், அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தான். அந்த மாணவனிடம், "நாளை (நேற்று) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. நீ பள்ளிக்கு வர வில்லை என்றாலும் தேர்வு எழுத வா. உனக்காக அனு மதிச்சீட்டு வழங்குகிறேன்" என தலைமைஆசிரியர் அழைத்துள்ளார்.
அப்போது உடன் விளையாடிக் கொண்டி ருந்த அதே பகுதியைச் சேர்ந்த குமார் (45) என்ப வர், சதாசிவத்தை தரக்கு றைவான வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். மேலும் உடன் வந்த 2 ஆசிரியர்களையும் தாக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து சதாசிவம் செங்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமைஆசிரியரை தாக் கிய குமாரை கைது செய்து,-சிறையில் அடைத்தனர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.