நிற்காமல் சென்ற பேருந்து - பின்னால் ஓடிய 12-ம் வகுப்பு மாணவி - ஓட்டுநர், நடத்துநர் அதிரடி சஸ்பெண்ட் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مارس 26، 2025

Comments:0

நிற்காமல் சென்ற பேருந்து - பின்னால் ஓடிய 12-ம் வகுப்பு மாணவி - ஓட்டுநர், நடத்துநர் அதிரடி சஸ்பெண்ட்



நிற்காமல் சென்ற பேருந்து - பின்னால் ஓடிய 12-ம் வகுப்பு மாணவி - ஓட்டுநர், நடத்துநர் அதிரடி சஸ்பெண்ட்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கொத்தாக கோட்டை பேருந்து நிறுத்தத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பொதுத்தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்குச் செல்ல காத்திருந்துள்ளார்.

அப்போது ஆலங்காயத்தில் இருந்து வாணியம்பாடி செல்லும் அரசு பேருந்து ஒன்று கொத்தாக கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. அதே சமயம் பொதுத்தேர்வு எழுத வேண்டுமே என்ற பதட்டத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து பின்னாடியே துரத்திக் கொண்டு மாணவி ஓடியுள்ளார். இதனைக் கவனித்த பின்னால் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் பேருந்தை நிறுத்துமாறு ஹாரன் அடித்துள்ளனர். அதன்பின்பு பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தள்ளி ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார்.

அதிகளவில் பயணிகள் இல்லாமல் காலியாகவே சென்றபோதும் ஓட்டுநரும் நடத்துநரும் பேருந்தை நிறுத்தாமல் அலட்சியமாக சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் பேருந்தை நிறுத்தாமல் அலட்சியமாக சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அரசு பேருந்து போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து - வீடியோ வெளியானதால் ஓட்டுநர் சஸ்பென்ட் Government bus driver suspended after video goes viral

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்தாததால் தேர்விற்கு செல்லும்+2 மாணவி பேருந்தின் பின்னால் ஓடிய காட்சி👇👇👇

கோத்தக்கோட்டை நிறுத்தத்தில் மாணவி நின்றிருந்த போது அரசுப் பேருந்து நிற்கவில்லை என குற்றச்சாட்டு

இதனால் மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

👇👇👇

CLICK HERE TO வீடியோ

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة