தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த பள்ளியாக இருந்தாலும்… பள்ளிகளில் பாலியல் புகார்… அமைச்சர் கொடுத்த எச்சரிக்கை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، فبراير 13، 2025

Comments:0

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த பள்ளியாக இருந்தாலும்… பள்ளிகளில் பாலியல் புகார்… அமைச்சர் கொடுத்த எச்சரிக்கை.



No matter who the perpetrators are, no matter which school… sexual harassment in schools… a warning from the minister. - தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த பள்ளியாக இருந்தாலும்…

பள்ளிகளில் பாலியல் புகார்… அமைச்சர் கொடுத்த எச்சரிக்கை.

அரசு பணியாளர்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை திட்டம்

பாலியல் புகாரில் சிக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை திருத்த முடிவு

குழந்தைகள் நல ஆணையம், காவல்துறை உள்ளிட்டோருடன் பள்ளிக்கல்வி ஆலோசனை

கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 238 பேரின் பட்டியல் தயார் 238 பேர் மீதான புகார் குறித்து விரைந்து விசாரித்து முடிக்க பள்ளிகல்வி அமைச்சர் உத்தரவு

பள்ளி மாணவர்கள் மீதான பாலியல் தாக்குதலை முற்றிலும் தடுக்க அதிகபட்ச நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட உள்ளது

போக்சோ குற்றம் நிரூபிக்கப்பட்டால் கல்வி சான்றிதழ் ரத்து

• போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வேறு எங்கும் பணியாற்ற முடியாதபடி கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும்

பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். துன்புறுத்தல்கள் குறித்து மாணவர்கள் புகார் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

• பாலியல் புகார் வந்தால் உடனடியாக நேரடி ஆய்வுக்கு செல்ல வேண்டும். விசாரிக்க தவறிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களை ஆசிரியர்கள் திட்டினால் 14417 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

-பள்ளி கல்வித்துறை

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة