முதல்வருடன் பேசிய பின் அடுத்த கட்ட நடவடிக்கை: அமைச்சர் மகேஷ் தகவல்
'பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் நேற்று துணை முதல்வர் உதயநிதியை, கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின் அவர் அளித்த பேட்டி:
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு, முதல்வர், துணை முதல்வர் மட்டுமின்றி, கட்சி வேறுபாடுகளை கடந்து, மாணவர் நலனே முக்கியம் என்பதை உணர்ந்த அனைத்து கட்சியினரும், தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே, சர்வ சிக் ஷா அபியான், ஆர்.என்.எஸ்.ஏ., என்ற பெயர்களில் இருந்த திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு, சமக்ர சிக் ஷா அபியான் என்ற திட்டமாக 2018ல் மாற்றப்பட்டது.
அதன்பின், மத்திய, மாநில கல்வித்துறை அதிகாரிகள் இணைந்து பேசி, கல்வி திட்டத்தில் புதிதாக சேர்க்க வேண்டிய விஷயங்களை பேசுவர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.