Teachers' Appointment Draft Report: Deadline for comments is February 28 - ஆசிரியர்கள் நியமன வரைவு அறிக்கை: கருத்து தெரிவிக்க பிப்.28 வரை அவகாசம்
கல்லூரிகளில் ஆசிரியர்கள், பணியாளர்களை நியமிப்பது குறித்த யுஜிசியின் வரைவு அறிக்கைக்கு கருத்து தெரிவிக்கும் காலஅவகாசம் பிப்,28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜெயின், அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள், கல்வி சார்ந்த பணியாளர்களை புதிதாக நியமிக்கவும், பதவி உயர்வு வழங்குவதற்கும் குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிப்பது தொடர்பான வரைவு அறிக்கை யுஜிசி சார்பில் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அவற்றை https://www.ugc.gov.in/ எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும், அதுகுறித்து கருத்துகளை பகிரவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கான காலஅவகாசம் பிப்.5-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, வரைவு அறிக்கை தொடர்பாக கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபம் தெரிவிப்பதற்கான அவகாசம் பிப்.28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.