JEE தேர்வு வரும் 22ல் துவக்கம் JEE exam to begin on the 22nd - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يناير 14، 2025

Comments:0

JEE தேர்வு வரும் 22ல் துவக்கம் JEE exam to begin on the 22nd



JEE தேர்வு வரும் 22ல் துவக்கம்

ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில், பொறியியல், தொழில்நுட்ப படிப்பில் சேருவதற்கான, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட நுழைவுத்தேர்வு, வரும் 22 முதல், 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களிலும், இந்தியாவுக்கு வெளியில், 15 தேர்வு மையங்களிலும், வரும் 22, 23, 24, 28, 29ம் தேதிகளில், பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான முதல் தாள் தேர்வுகள் நடக்க உள்ளன. அதேபோல, பி.ஆர்க்., - பி.பிளானிங், உள்ளிட்ட படிப்புகளுக்கான, 2ஏ, 2பி, 2ஏ,பி., ஆகிய தாள்களுக்கான தேர்வுகள், வரும் 30ம் தேதி நடக்கும். விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மையம் அமைந்துள்ள நகரம் பற்றிய விபரங்களை, https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வாளர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள், பின்னர் வழங்கப்படும். மேலும் விபரங்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة