தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் நோய் பாதிப்பு.. சுகாதாரத் துறை எச்சரிக்கை!
இந்த நோய் பாதித்தால், காய்ச்சல், உடல் வலி, தலைவலி, போன்றவை ஏற்படும் என்றும், உடலின் பல்வேறு இடங்களிலும் கருப்பு கொப்புளங்கள் போல உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தெற்கு மாவட்டங்களில் தற்போது இந்த நோய் பரவி வருவதாகவும், வேலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் இந்த நோயால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்கரப் தைபஸ் என்பது பூச்சிக்கடியால் ஏற்படும் நோய் என்பதால், பொதுவாகவே விவசாயத்தில் ஈடுபடுவோருக்கும், செடிகள் அதிகம் இருக்கும் பகுதியில் இருப்பவர்களுக்கும் இந்த நோய் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே, விவசாயம், புதர் நிறைந்த பகுதிகளில் இருப்பவர்கள், காடுகளில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், இந்த நோய் உயிரிழப்பை ஏற்படத்தக்கூடும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவருக்கு 5 நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக ஐஜிஎம் ஆன்ட்டிபாடி மற்றும் எலிசா போன்ற மருத்துவப் பரிசோதனை செய்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், டாக்ஸிசிலின், அசித்ரோமைசின், ரிஃபாம்பிசின் உள்ளிட்ட மருந்துகளை, நோயாளிகன் உடல்நிலை மற்றும் வயதுக்கு ஏற்ற அளவில் வழங்க வேண்டும் என்றும், 48 - 72 மணி நேரத்தில் உடல்நிலை சீராகவில்லை என்றாலோ, இதயம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிப்பது போன்ற பிரச்னைகளை உணர்ந்தாலோ உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
எப்போது கண்டுபிடிக்கப்பட்டது இந்த நோய்?
உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் முதன்முதலில் இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு பலருக்கும் பரவிய மர்மக் காய்ச்சல் தொடர்பான சோதனையில் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களிடயே குறிப்பாக கிராம மக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
بحث هذه المدونة الإلكترونية
الخميس، يناير 02، 2025
Comments:0
Home
HEALTH
Health and Family Welfare
Health department
Health Minister
health officer
Health Secretary Circular
தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் நோய் பாதிப்பு.. சுகாதாரத் துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் நோய் பாதிப்பு.. சுகாதாரத் துறை எச்சரிக்கை!
Tags
# HEALTH
# Health and Family Welfare
# Health department
# Health Minister
# health officer
# Health Secretary Circular
Health Secretary Circular
التسميات:
HEALTH,
Health and Family Welfare,
Health department,
Health Minister,
health officer,
Health Secretary Circular
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.