12 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லை - ட்ரெண்டாகும் Memes - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 22, 2025

Comments:0

12 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லை - ட்ரெண்டாகும் Memes



12 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனம் இல்லை - ட்ரெண்டாகும் Memes

கடந்த 12 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் எதுவும் நடைபெறாத சூழலில், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதுகுறித்து பல்வேறு பதிவுகள் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க கல்வியால் மட்டுமே முடியும். "ஆசிரியர் தொழிலை விட சமுதாயத்திற்கு முக்கியமான தொழில் உலகில் வேறு எதுவும் இல்லை என்று நான் நம்புகிறேன்- அப்துல் கலாம்

கல்வி நாளைய தலைமுறையை செழிப்பாக்கும்.



12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்

கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே – பாரதிதாசன்

இடைநிலை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 10 ஆண்டுகளாக காலியாக உள்ள ஆசிரியர் (Teacher ) பணியிடங்களில் SGT & BT/BRTE TRB தேர்வு எழுதிய ஆசிரியர்களுக்கு, கூடுதல் பணியிடம் உயர்த்தி அறிவிக்க வேண்டும்.

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் 75 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை நினைவூட்டுகிறோம்'' என்பன உள்ளிட்ட பல்வேறு பதிவுகள் அதில் பதிவிடப்பட்டு வருகின்றன.

அதேபோல ஆசிரியர் பயிற்றுநர் இடங்களையும் நிரப்பக் கோரிக்கை வலுத்து வருகின்றது. இதனால், Increase BT TRB Vacancy என்ற தலைப்பில், #increase_BT_BRTE_TRB_vacancy2024 #Increase_SGT_TRB_Vacancy என்ற ஹேஷ்டேகுகள் எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews