டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- அண்ணா பல்கலை. தகவல், - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يناير 24، 2025

Comments:0

டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- அண்ணா பல்கலை. தகவல்,

FOR M.B.A. and M.C.A. DEGREE PROGRAMMES

Applications are invited for Tamil Nadu Common Entrance Test (TANCET - 2025) to be conducted by Anna University, Chennai on behalf of the Government of Tamil Nadu from the candidates who seek admission to M.B.A. and M.C.A. Degree Programmes for the academic year 2025-2026 offered at University Departments, Constituent colleges of Anna University, Annamalai University, Government and Government Aided Colleges (Engineering, Arts & Science Colleges) and Self-Financing Colleges (Engineering, Arts & Science Colleges including stand-alone Institutions) in Tamil Nadu.

TANCET EXAM DATES

M.C.A : 22.03.2025 (Saturday) [10.00 AM To 12.00 NOON]

M.B.A : 22.03.2025 (Saturday) [02.30 PM To 04.30 PM]



எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் மாணவர் சேர்க்கை; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம் Application form for admission to MBA/MCA Degree Courses 2024-2025. Admission to MBA/MCA Degree courses offered in Government,Government Aided Engineering

எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர டான்செட் என்ற பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். அதேபோல், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் படிப்புகளில் சேர வேண்டுமானால் சீட்டா என்ற பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டு். இந்த இரண்டு நுழைவுத்தேர்வுகளையும் தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2025-2026) மாணவர் சேர்க்கைக்கான டான்செட், சீட்டா பொது நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதன்படி, டான்செட் எம்சிஏ நுழைவுத்தேர்வு மார்ச் 22-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், அதேபோல், எம்பிஏ நுழைவுத்தேர்வு அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், சீட்டா பொது நுழைவுத்தேர்வு மார்ச் 23-ம் தேதி (ஞாயிறு) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும் நடைபெற உள்ளன இந்நுழைவுத்தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி டான்செட், சீட்டா பொது நுழைவுத்தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி உடைய பட்டதாரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.annauniv.edu) பயன்படுத்தி பிப்ரவரி 21-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டான்செட் நுழைவுத்தேர்வு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة