பட்டப்படிப்பு காலத்தை அதிகரிக்க, குறைக்க வசதி
பட்டப்படிப்பு காலத்தை அதிகரித்துக் கொள்ள அல்லது குறைத்துக் கொள்ள, மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைகழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது.
யு.ஜி.சி., தலைவர் ஜகதீஷ் குமார் கூறியதாவது:
தற்போது, பல வெளிநாட்டு பல்கலைகளில், மாணவர்கள் தங்களுடைய பட்டப்படிப்பு காலத்தை நிர்ணயித்து கொள்ளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதன்படி, காலத்தை அதிகரித்துக் கொள்ளலாம் அல்லது குறைத்து கொள்ளலாம்.
இதுபோன்ற வாய்ப்பை நம் உயர் கல்வி நிறுவனங்களிலும் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான வரைவு திட்டம், யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் இது குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
பட்டப் படிப்பு காலத்தை அதிகரித்துக் கொள்வது அல்லது குறைத்துக் கொள்வதற்கு ஏற்ப, மாணவர்களுக்கு வழங்கப்படும் கிரெடிட் எனப்படும் மதிப்பெண் குறியீடுகளும் மாறும்.
இவ்வாறு கூறினார்
பட்டப்படிப்பை நினைத்த நேரத்தில் முடிச்சுக்கோங்க; மாணவர்களுக்கு நல்ல செய்தி சொல்கிறார் யு.ஜி.சி., தலைவர்
மாணவர்கள் விரும்பினால் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியோ அல்லது கூடுதல் காலங்கள் எடுத்து கொண்டு, படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என யு.சி.ஜி., தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியக் குழு கூட்டம் நவம்பர் 13ம் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில், பட்டப்படிப்பு முடிக்கும் காலம் குறித்து முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து யு.சி.ஜி., தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது:
மாணவர்கள் தங்கள் கற்றல் திறன்களின் அடிப்படையில் தங்கள் படிப்பு காலத்தை குறைக்க அல்லது நீட்டிக்க முடிவு செய்யலாம். மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்க கூடுதல் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கும் யு.ஜி.சி., கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
கூடுதல் அவகாசம்!
மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம். தேவைப்பட்டால் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது.
உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் கற்றல் திறன்களை மதிப்பிடுவதற்கு குழுக்களை அமைக்கும். மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனையும், சுயதொழில் ஆர்வத்தையும் மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு திறன்சார்ந்த கல்வி அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
Search This Blog
Sunday, December 01, 2024
Comments:0
Home
UGC
பட்டப்படிப்பை நினைத்த நேரத்தில் முடிச்சுக்கோங்க; மாணவர்களுக்கு நல்ல செய்தி சொல்கிறார் யு.ஜி.சி., தலைவர்
பட்டப்படிப்பை நினைத்த நேரத்தில் முடிச்சுக்கோங்க; மாணவர்களுக்கு நல்ல செய்தி சொல்கிறார் யு.ஜி.சி., தலைவர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.