TNPSC - Official Telegram Channel of Tamil Nadu Public Service Commission - Channel Link - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، نوفمبر 16، 2024

Comments:0

TNPSC - Official Telegram Channel of Tamil Nadu Public Service Commission - Channel Link



TNPSC - Official Telegram Channel of Tamil Nadu Public Service Commission - Channel Link

டி.என்.பி.எஸ்.சி டெலிகிராம் சேனல்..!

TNPSC Telegram Channel:

தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ (Tamil Nadu Public Service Commission) தனது தேர்வர்களுக்குப் புதிதாக டெலிகிராம் சேனலைத் (Telegram Channel) தொடங்கி உள்ளது.

Official Telegram channel of Tamil Nadu Public Service Commission

👇👇

CLICK HERE TO Channel Link (Choose Telegram App)

தேர்வுகள் தொடர்பான விவரங்களை தேர்வர்கள் அறிந்து கொள்ள 'டி.என்.பி.எஸ்.சி. டெலிகிராம் சேனல்'

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், குரூப்-1, 2, 2ஏ, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கு போட்டித் தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு தொடர்பான அறிவிப்புகள், எழுதிய தேர்வுகளின் முடிவுகள் CLICK HERE TO Channel Link (Choose Telegram App) என்ற டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்திலும் வெளியாகிறது. இதன் மூலம் தேர்வர்கள் பார்த்து அறிந்து கொள்கின்றனர். இந்த நிலையில் தற்போது டெலிகிராம் சேனல் பக்கத்திலும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ பக்கத்தை தொடங்கி உள்ளது.

இந்த பக்கத்தில் தேர்வர்கள் தங்களை இணைத்துக்கொள்ள CLICK HERE TO Channel Link (Choose Telegram App) என்ற எக்ஸ் தளப்பக்கத்துக்கு சென்று அதில் டெலிகிராம் சேனல் தொடங்கப்பட்டது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், டி.என்.பி. எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலுக்கு சென்றுவிடும். அதில் தேர்வர்கள் தங்களை இணைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் தேர்வுகள், தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة