#SchoolLeave | கனமழை எதிரொலி… எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமா தமிழ்நாட்டின் அநேக இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தாழ்வு மையம் நகரும் வேகம் குறைந்ததன் காரணமாக நேற்று மழையின் அளவு வெகுவாக குறைந்தது.இருப்பினும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது. சில பகுதிகளில் தற்போது வரை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.அதேபோல் கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.