EMIS - மாணவர்கள் விபரம் பதிவேற்ற அவகாசம் வழங்க கோரிக்கை
மாணவர் விபரம் சேகரித்து, எமிஸ் தளத்தில் பதிவேற்ற, அவகாசம் வேண்டும் என தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்து கல்லுாரிக்கு செல்லும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் வாயிலாக மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிது. இதுபோல் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சலுகை உள்ளது.
இவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்தபின், அவர்களின் பிரத்யேக விண்ணப்பப் படிவம், ஆதார் எண் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட கல்லுாரியில் இருந்து பள்ளிக்கல்விக்கு அனுப்பி வைக்கப்படும்.
சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்கள் விபரங்களை ஆய்வு செய்து, எமிஸ் தளத்தில் அறிக்கை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், இந்த நடைமுறைக்கு போதிய அவகாசம் வழங்கப்படுவதில்லை என தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர். தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
கல்லுாரிகளில் சேர்க்கையான மாணவர்கள், 6 முதல் பிளஸ் 2 வரை தமிழில் தான் படித்தார்களா என்பதை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தான் உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்கள் பெயர் விபரத்தை வெள்ளிக்கிழமை குறிப்பிடப்பட்டு, திங்களுக்குள் சமர்ப்பிக்க வற்புறுத்தப்படுகிறது. பல்வேறு பணிச்சூழலுக்கு இடையே சிக்கித் தவிக்கும் தலைமையாசிரியர்களுக்கு, இது பெரும் சவாலாக உள்ளது. எனவே குறைந்தது 10 நாட்களாவது அவகாசம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.