பள்ளியில் உணவு தயாரிக்கும் போதே லீக் ஆன கேஸ்.. - நொடியில் தப்பிய ஊழியர்கள்..
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசு பள்ளியில், முதலமைச்சர் காலை உணவு திட்டம் உணவு தயாரிக்கும் போது, திடீரென்று சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து தீ பற்றியதால், மூன்று பெண்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியனர். காவிரி ராஜபுரத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 38 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் தயாரிக்கும்போது, சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து, தீ பற்றி எரிந்தது. அப்போது, சமையல் செய்யும் பெண்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்ததால், ஊர் மக்கள் கூடி, தீயை அணைத்தனர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.