டேட்டா பேஸ் இன்ஜினியரிங் ஹேக்கத்தான்
நாடு முழுவதும் உள்ள டெவலப்பர்கள் மற்றும் பொறியாளர்கள் பங்குபெறும் வகையில் ஐஐடி பிரவர்தக் பவுண்டேஷன், ஐஐடி சென்னை இன் டெக்னாலஜி இன்னோவேஷன் ஹப் நடத்தும் டேட்டாபேஸ் ஹேக்கத்தானுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த ஹேக்கத்தானில் வெற்றி பெறும் சிறந்த டெவலப்பர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக முறையே ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் பரிசுகள் வழங்கப்படும். சென்னை ஐஐடி-ன் இயக்குனர் பேசுகையில், தரவுத்தள பொறியியலில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான முன்முயற்சியாக இந்த ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது, என்றார்.
இந்த ஹேக்கத்தான் போட்டிக்கு ஆர்வமுள்ளவர்கள் நவ., 24ம் தேதிக்குள் https://www.hackerearth.com/challenges/hackathon/iitm-pravartak/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.