பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த பார்லி., நோக்கி ஊர்வலம் ஆசிரியர் கூட்டணி தகவல்
தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்யக்கோரி நவ.,29ல் பார்லிமென்ட் நோக்கி ஊர்வலம் செல்ல உள்ளதாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் கூறியதாவது: தேசிய கல்வி கொள்கை, பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி நவ., 29 ல் இந்திய பள்ளிகள் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பார்லிமென்ட் நோக்கி ஊர்வலம் செல்ல உள்ளோம்.
காளையார்கோவிலில் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 20 மாத சம்பளத்தை விரைந்து பெற்றுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எமிஸ் பணிகளில் தொடர்ந்து ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை நிறுத்தவேண்டும்.
பள்ளியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு நிலுவையின்றி சம்பளம் வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.