முதல்வராக இருந்தபோது எங்களை அழைத்துகூட பேசாதவர் எடப்பாடி: அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு
விருதுநகர்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு விருதுநகரில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற மாநில துணை பொதுச்செயலாளர் சோமசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தொகுப்பூதியத்தில் இருக்கும் அங்கன்வாடி, சத்துணவு, ஊராட்சி செயலாளர்கள் என லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ள 6 லட்சம் இளைஞர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும்.எதிர்க்கட்சி தலைவராக உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு காலத்தில் முதல்வராக இருந்தபோது எங்களை அழைத்துக் கூட பேசாதவர். தமிழக அரசு துறைவாரி சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.