TNPSC - குரூப் 4 தேர்வு: கூடுதலாக 2,208 பணியிடங்கள்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 6, 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.
குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.