Online வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 15, 2024

Comments:0

Online வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!



Online Class எடுக்கக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்!

ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார் சென்னை , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர. கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றே ன்.

கனமழை மற்றும் தீவிர காற்று வீசும் இடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படலாம். எனவே ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தனியார் கல்வி நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளார் Online வகுப்புகள் நடத்தக்கூடாது.

-அமைச்சர் அன்பில் மகேஷ்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews