கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை(15.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(15.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என புதுவை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தென் கிழக்கு வங்கக்கடல் பகுதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாளை புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளை கனமழை பெய்யும் என்பதால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவருகிறது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்து வருகிறார்.ஏற்கனவே கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.