காற்று மாசு எதிர்த்து போராட பள்ளிகள், பெற்றோர் கைகோர்ப்பு
டில்லியின் மாசு நெருக்கடியை எதிர்த்துப் போராட பள்ளிகளுடன், மாணவர்களின் பெற்றோர் கைகோர்த்துள்ளனர்.
தலைநகர் டில்லியில் காற்று மாசு மோசமான அளவிலேயே நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதியோரும் குழந்தைகளும் சுவாச பிரச்னையால் அவதிப்படுகின்றனர். காற்று மாசுபாட்டை தவிர்க்க புதைபடிவ எரிபொருளில் இயங்கும் போக்குவரத்திற்கு எதிராக அறிவுரைகளை மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் வழங்கி வருகின்றன. பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கும்படி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்திரபிரஸ்தா பள்ளியின் முதல்வர் ராஜேஷ் ஹசிஜா கூறியதாவது:
மாணவர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கவும், வீட்டில் மரக்கன்றுகளை நடுவதை ஊக்குவிக்கவும் காலை இறைவணக்கத்தின்போது உறுதிமொழி எடுக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார்.
எங்கள் பள்ளியில் தண்ணீரை மறுசுழற்சி செய்து, துாசி மற்றும் புகையைக் குறைக்கிறோம். கூடுதலாக, நாங்கள் ஒரு கிளப்பை நடத்துகிறோம். அங்கு மாணவர்கள் வருடாந்திர மரக்கன்றுகள் நடும் முயற்சிகளில் பங்கேற்கிறோம். பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். பள்ளி நிர்வாகங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பெற்றோர் சங்கத் தலைவர் அப்ரஜிதா கூறியதாவது:
ஜி.ஆர்.ஏ.பி., எனும் கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான் அமல்படுத்தப்பட்டாலும், நகரில் மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை தீபாவளியை கொண்டாட பெற்றோரை மாணவர்கள் வலியுறுத்த வேண்டும்.
அதிகரித்த மாசு காரணமாக, பல மாணவர்களுக்கு தோல், நுரையீரல் ஒவ்வாமை உள்ளிட்ட உடல்நலப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மரக்கன்றுகளை நடுதல் மற்றும் வீட்டில் காற்று சுத்திகரிப்பானை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பெற்றோர் எடுக்கின்றனர்.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மாசுபாடு உச்சத்தில் இருக்கும்போது பள்ளிகளுக்கு, குறைந்தது ஐந்து முதல் ஆறு மாசு விடுமுறைகளை மாநில அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மோசமான காற்று, மாணவர்களின் மனதையும் உடலையும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து மாணவர்களிடமும் பெற்றோரிடமும் விளக்குவது, முகமூடி அணிந்து கொள்ளும்படி மாணவர்களை ஊக்குவிப்பது, பசுமைத்தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது என ஐ.டி.எல்., பள்ளி முதல்வர், சுதா ஆச்சார்யா கூறினார்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.