உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு!
அரசு பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டு குறித்து பயிற்சி அளிக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு பள்ளிகளின் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு, பல்வேறு விளையாட்டுகள் குறித்து, இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஸ்போர்ட்ஸ் மூலம் பயிற்சி அளிக்க, ஏற்பாடுகள் நடக்கின்றன.
அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்கவும், வருங்காலத்தில் அவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கவும், கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், கல்வித்துறை கமிஷனர் திரிலோக சந்திரா, பிரிட்டிஷ் கவுன்சிலின், தென்னிந்திய இயக்குனர் ஜனக புஷ்பநாதன் கையெழுத்திட்டுள்ளனர். பள்ளிக்கல்வி அமைச்சர் மது பங்காரப்பா, நேற்று அளித்த பேட்டி:
அரசு பள்ளி மாணவர்களிடம் மறைந்துள்ள விளையாட்டு திறனை அடையாளம் கண்டு, அந்த திறனை அதிகரிக்க வேண்டும். இதனால் அவர்கள் வருங்காலத்தில் நல்ல விளையாட்டு வீரர்களாக உருவாகலாம்.
இதை மனதில் கொண்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டு குறித்து பயிற்சியளிக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு பள்ளிகளின் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு, பல்வேறு விளையாட்டுகள் குறித்து, இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஸ்போர்ட்ஸ் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
முதற்கட்டமாக தொடக்க பள்ளிகளின் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு விளையாட்டு மற்றும் திறன் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் மற்ற பள்ளிகளில் பயிற்சி துவங்கும். மாணவர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, கமிஷனர் திரிலோக சந்திரா, பிரிட்டிஷ் கவுன்சிலின், தென்னிந்திய இயக்குனர் ஜனக புஷ்பநாதன் நேற்று (முன் தினம்) கையெழுத்திட்டனர்.
கபடி, கோகோ உட்பட மற்ற பாரம்பரிய விளையாட்டுகளை, கால்பந்து விளையாட்டு போன்று வளர்க்க வேண்டும். 6 வயதில் இருந்தே, பள்ளி சிறார்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்போது ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.