முன்னெச்சரிக்கை -
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு கடிதம் பள்ளி மேற்கூரைகளின் மேல் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க பழுதான நிலையில் உள்ள கட்டிடங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பள்ளிகளில் உள்ள சுற்றுச்சுவரின் உறுதித் தன்மையை கண்காணிக்க வேண்டும்.
வகுப்பறை, கழிப்பறைகள் ஆபத்தான முறையில் இருந்தால் பூட்டி வைக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் ஆபத்தான முறையில் உள்ள மின் கம்பிகளை மின்வாரியத்தின் துணையுடன் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களை இடிப்பதுடன், பள்ளி வளாகத்தில் நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏரி,குளங்களில் மாணவர்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். கனமழை - பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவு
கனமழையை முன்னிட்டு பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பள்ளிகளின் மின் இணைப்புகள் கண்காணிப்பது, வடிகால்கள் சுத்தம் செய்து திறந்தவெளி கால்வாய்களை மூட வேண்டும், பள்ளிகளில் பாதிப்பு ஏற்படுத்தும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்,
பள்ளி மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பழுதான பலவீனமான கட்டிடங்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.