Breaking

Wednesday, October 23, 2024

தமிழக சுகாதார துறையில் 'பிசியோதெரபிஸ்ட்' வேலை; விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 7.



தமிழக சுகாதார துறையில் 'பிசியோதெரபிஸ்ட்' வேலை;

47 பேருக்கு வாய்ப்பு

தமிழக சுகாதார துறையில் 47 'பிசியோதெரபிஸ்ட்' பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 7.

சுகாதார துறையில் காலியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

'பிசியோதெரபிஸ்ட்' கிரேடு 2 பிரிவில் 47 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி என்ன?

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலை., மற்றும் கல்லூரியில் தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு.

பொது பிரிவினருக்கு அதிகபட்சம் வயது 32, மற்ற பிரிவுக்கு வயது உச்சவரம்பு இல்லை. தேர்ச்சி முறை எப்படி?

தமிழ் தகுதி தேர்வு, ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 1000. எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினருக்கு ரூ.500

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog