சென்னை திருவொற்றியூரில் இன்று வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு நாளை (அக். 26) விடுமுறை அறிவிப்பு #
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட விவகாரம்.
2 மணிக்கு பிறகே பள்ளி தரப்பில் இருந்து தெரிவித்ததாக பெற்றோர் குற்றச்சாட்டு.
தனியார் பள்ளி தலைமை ஆசிரியரிடம் திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி விசாரணை
வாயு கசிவால் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
காலை 10.30 மணியில் இருந்தே வாயு நெடி வெளியேறி வந்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தகவல் #
பள்ளியில் வாயு கசிவு: 35 மாணவ, மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவால் 35 மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 35 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளியின் 3வது தளத்தில் இருந்த மாணவ, மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு.
-35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி.
சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக புகார் வெளியாகியுள்ளது.
பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயக்கமடைந்த 3 மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மேலும் 32 மாணவிகள் என மொத்தம் 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளியில் இருந்து மாணவர்களை வெளியேற்றப்பட்டதால், குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வாயு வெளியேறியதா ? அல்லது பள்ளியில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்து வாயு வெளியேறியதா ? என விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.