வருமான வரி ரீபண்ட் வரவில்லையா? போலியான உரிமைக் கோரல்களை கண்டுபிடிக்கும் RMS சிஸ்டம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، سبتمبر 09، 2024

Comments:0

வருமான வரி ரீபண்ட் வரவில்லையா? போலியான உரிமைக் கோரல்களை கண்டுபிடிக்கும் RMS சிஸ்டம்!



வருமான வரி ரீபண்ட் வரவில்லையா? போலியான உரிமைக் கோரல்களை கண்டுபிடிக்கும் RMS சிஸ்டம்!

இந்தியாவில் வசிப்பவர்கள் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். வருமான வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்த பிறகு வருமான வரித்துறை அவற்றை சரி பார்க்கும். வரி செலுத்தியவர் கூடுதல் வரி செலுத்த வேண்டியுள்ளதா? அல்லது ரீபண்ட் தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளதா? என்பது போன்ற விவரங்களை சரி பார்த்த பின்னர் அந்தந்த நபர்களுக்கு ரீபண்ட் வர வேண்டி இருந்தால் திருப்பி செலுத்தப்படும். இந்த செயல்முறைக்கு முன்னதாக வரி செலுத்துவோர் சரிபார்க்கப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். ஏனெனில் வருமானவரி தாக்கல் செய்யும்போது ஏதேனும் பிழைகள் இருக்க வாய்ப்புண்டு. இந்த எல்லா செயல்முறையும் சரியாக செய்தவர்களுக்கும் இன்னும் ரீபண்ட் தொகை வராமல் இருக்கும். ஜூலை 31-ஆம் தேதி அன்று வருமான வரி தாக்கல் செய்தவருக்கு ரீபண்ட் கிடைத்துவிட்டது ஆனால் அதற்கு முன்கூட்டியே தாக்கல் செய்த எனக்கு ரீபண்ட் கிடைக்கவில்லை என்று புலம்புபவரா நீங்கள்.. உங்களுக்கு ரீபண்ட் கிடைக்காததற்கு கீழ்காணும் விஷயம் கூட காரணமாக இருக்கலாம்.

வருமானவரித்துறை ரீபண்ட் தொகையை திருப்பி செலுத்துவதற்கு சில விஷயங்களை சரி பார்க்கும். அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்று தான் ரிஸ்க் "மேனேஜ்மென்ட் சிஸ்டம்" (RMS) இந்த RMS சிஸ்டத்தைப் பயன்படுத்தி தான் வருமான வரித்துறை இன்னும் சில நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ITR-களை அடையாளம் காணும். RMS சிஸ்டத்தில் உங்கள் ஐடிஆர் அடையாளம் காணப்பட்டால் உங்கள் ஈமெயில் முகவரிக்கு ஒரு தகவல் அனுப்பப்படும். இந்த அறிவிப்பை நீங்கள் இ-ஃபைலிங் போர்டல் மூலமாகவும் பார்க்கலாம்.

வருமானவரித் துறையின் RMS போர்டல் உங்கள் ஐடியாரை கண்டறிந்த பிறகு எந்தவித செயலாக்கமும் செய்யப்பட மாட்டாது. அதற்கான நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும். அப்படி இல்லை எனும் பட்சத்தில் வரி துறை உங்களுக்கு வருமான வரி அறிவிப்பை வெளியிடலாம். வருமானவரித்துறையின் "ரிஸ்க் மேனேஜ்மென்ட் சிஸ்டம்" எப்போது உங்கள் ரீபண்ட் செயல்முறையை நிறுத்திவைக்கும்?: வருமானவரித்துறையின் முன்னாள் தலைமை ஆணையர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகையில் அதாவது பல ஆண்டுகளாக வரி கணக்குகளில் போலியான கோரிக்கைகளை அடையாளம் கண்டுள்ளது மற்றும் அத்தகைய கோரிக்கைகளை செய்த நபர்களை கைது செய்யும் நோக்கத்துடன் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

வரித் துறையால் பயன்படுத்தப்படும் RMS செயல்முறை முரண்பாடுகளைக் கண்டறிய பல்வேறு தரவுத் தொகுப்புகளை ஆய்வு செய்கிறது என்று கூறப்படுகிறது.

வருமான வரித்துறையின் இந்த RMS வழக்கத்திற்கு மாறான உரிமை கோரல்களை எளிதில் கண்டுபிடித்து விடும். இதன் மூலம் கூடுதல் ஆய்வு தேவைப்படும் ஐடியார்களை கண்டுபிடித்து விடலாம். இந்த செயல்பாட்டின் கீழ் உங்கள் ஐடிஆர் தேர்ந்தெடுக்கப்படும்போது ரீபண்ட் பெரும் செயல்முறை சற்று தாமதமாகலாம். அப்படியானால் உங்கள் வருமானத்தில் சில விஷயங்களை வருமானவரித்துறை சரி பார்க்க விரும்புகிறது என்று அர்த்தம்.

வருமான வரித்துறையிடமிருந்து உங்களுக்கு இது தொடர்பான அறிவிப்பு கிடைத்ததா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?: அதற்கு முதலில் வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் லாகின் செய்து உள்நுழைய வேண்டும். "For Your Action" என்பதன் கீழ் இதுகுறித்த அறிவிப்புகள் இருக்கும்.

இதற்கு உங்களுடைய பதிலை சமர்ப்பிக்க e-Filing portal >>Pending Action >>Worklist>> Response for Refund Confirmation என்பதில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வரித் துறை, வரித் திரும்பப் பெறல் செயல்முறையை நிறுத்தி, உங்கள் ITR ஐ மேலும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கும் என்பதை அடையாளம் காண ரிஸ்க் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. எனவே ரீபண்ட் பெறுவதற்கு நீங்கள் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில், வரித் துறை உங்களுக்கு வருமான வரி அறிவிப்பை வழங்கலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة