துணை மருத்துவ படிப்புகள் கலந்தாய்வு துவக்கம்
துணை மருத்துவப் படிப்புகள்: கலந்தாய்வு தொடக்கம் சென்னை. செப்.20: தமிழகத்தில்துணை மருத்துவப் படிப்புகளுக் கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிக்டி பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங் களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கிட்டுக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் இடங்களும் அதில் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடை பெறுகிறது.
அந்த இடங்களுக்கான நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in www.tnmedicaiselection.org ஆசிய இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மே 23-ஆம் தேதி தொடங்கி ஜூன் 26-ஆம் தேதி வரை நடை பெற்றது. அதில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 68,108 பேரும், பார்ம்டி படிப்புக்கு 3,540 பேரும் விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பங்கள் பரிசிலனை செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந் நிலையில், துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு https://tnmedicalselection.net என்ற இணையதளத் தில் வெள்ளிக்கிழமை செப்.20) தொடங்கியது.
மாணவர்கள் வரும் 25-ஆம் தேதி வரை கலந்தாய்வில் பதிவு செய்து, விருப்பமான இடங்களை தேர்வு செய்யலாம். இடங்கள் ஒதுக்கீட்டு விவரங்கள் வரும் 28-ஆம் தேதி வெளியி டப்படும். ஒதுக்கீடுபெற்றமாணவர்கள் அக்டோபர் 4-ஆம்தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவக் கல்வி தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الأحد، سبتمبر 22، 2024
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.