*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்* *நாள்:09.08.2024*
*******
*TNPTF சார்பில் சென்னை மாநகரில் NHIS முறைகேடுகளை எதிர்த்து 16.08.2024ல் மாநில அளவிலான கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!*
*சென்னை-எழும்பூர், ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் போராட்டம் நடத்த சென்னை மாநகரக் காவல்துறை அனுமதி!*
*******
*ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட முறைகேடுகளை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் 16.08.2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சென்னை மாநகரில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.*
*மேற்கண்ட ஆர்ப்பாட்டத்தை சென்னையில் கிரீம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு நடத்துவதற்கான அனுமதி கோரி இன்று(09.08.2024) சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.*
*
ஆனால்,மாநகர காவல்துறை சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான எழும்பூர்- ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது என்ற விவரத்தை நம் பேரியக்கத் தோழர்களுக்கு மாநில மையம் தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.*
*இன்றைய இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் ச.மயில்,STFI அகில இந்தியப் பொதுக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.டேவிட் ராஜன்,மாநில துணைத்தலைவர் தோழர் பெ.செ.அமர்நாத், மாநிலச்செயலாளர் தோழர்.க.சத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.*
*******
*தோழமையுடன்* *ச.மயில்*
*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
بحث هذه المدونة الإلكترونية
السبت، أغسطس 10، 2024
Comments:0
Home
ASSOCIATION
NHIS
NHIS Scheme
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 16.08.2024ல் மாநில அளவிலான கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 16.08.2024ல் மாநில அளவிலான கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்!
Tags
# ASSOCIATION
# NHIS
# NHIS Scheme
NHIS Scheme
التسميات:
ASSOCIATION,
NHIS,
NHIS Scheme
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.