TNPSC - பொறியியல் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு: நேர்முகத் தேர்வுக்கு 644 பேர் அனுமதி
டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதனடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு 644 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.ஜான் லூயிஸ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உள்ளடக்கிய பதவிகளில் 358 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஜனவரி 6 மற்றும் 7-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்வின் முடிவுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த கட்டதேர்வான நேர்முகத்தேர்வுக்கு 644 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம், என்று அவர் கூறியுள்ளார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.