Kalaithirivizha 2024 - 25 | Important Points - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 20, 2024

Comments:0

Kalaithirivizha 2024 - 25 | Important Points



Kalaithirivizha 2024 - 25 | Important Points

கலைத் திருவிழா போட்டிகள் . 2024 - 2025

கலைத் திருவிழா போட்டிகள் 2024 - 2025. வணக்கம். 2024-2025 ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி அளவில் 22.08.2024 முதல் 30.08.2024 வரை கலை திருவிழா போட்டிகள் நடைபெற வேண்டும். போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னர் மாணவ பங்கேற்பாளர்கள் விவரங்கள் EMIS ல் 19.08.2024 முதல் 21.08.24 வரை உள்ளீடு செய்தல் வேண்டும்.

+ பங்கேற்பாளர்கள் விவரங்களை உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள் : 21.08.24.

+ வெற்றியாளர்களை EMIS-ல் உள்ளீடு செய்ய கடைசி தேதி 03/09/2024

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் குறைந்த பட்சம் ஒரு போட்டியிலாவது பங்கேற்க வேண்டும். சிறப்பு கவனம் தேவைப்படும் (CWSN ) குழந்தைகளும் இப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். ID, ASD, CP(Intellectual Disability, Autism Spectrum Disorder, Cerebral Palsy அவர்களுடைய பங்கேற்பின் போது காணொளி மற்றும் புகைப்படம் எடுத்தல் வேண்டும். சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் EMIS தளத்தில் மேற்கூறிய பிரிவுகளில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் காணொளி மற்றும் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்தல் வேண்டும். பள்ளி அளவிலான அனைத்து போட்டிகளும் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற மையக் கருத்தின் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும். கீழ்காணும் துணை வகை தலைப்பின் கீழ் மாணவர்கள் போட்டிகளில் பங்கு பெறுதல் வேண்டும்.

1) அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுதல்.

2) நிலையான உணவு முறையை / உற்பத்தியை ஏற்படுத்துதல்.

3) மின்னணுக் கழிவுகளை குறைத்தல்

4) ஆற்றலை பாதுகாத்தல்.

5) தேவையற்ற கழிவுகளை குறைத்தல், மறுசுழற்சி செய்தல், மீண்டும் பயன்படுத்துதல் (3R)

6) நீரை சேமித்தல்/ பாதுகாத்தல்

7) ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை தவிர்த்தல்
குறிப்பு:

இம்முறை நடனம் மற்றும் பாடல்கள் திரைப்படத்திலிருந்து பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பாடல்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. பள்ளி அளவிலான அனைத்து போட்டிகளும் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற மையக் கருத்தின் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும். பள்ளி அளவிலான கலை திருவிழா போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களது பெயர்களை EMIS ல் மேற்குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் முடித்தல் அவசியம்

கலைத் திருவிழா போட்டியினை பள்ளியளவில் சிறப்பான முறையில் நடத்திட அனைத்து தலைமை ஆசிரியர்களும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நன்றி வாழ்த்துகள். மகிழ்ச்சி.



No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews