தேசிய கொடியை ஏற்றுவதில் கவனமுடன் இருக்க வேண்டும் - பள்ளிகளுக்கு , கல்வித்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 14, 2024

Comments:0

தேசிய கொடியை ஏற்றுவதில் கவனமுடன் இருக்க வேண்டும் - பள்ளிகளுக்கு , கல்வித்துறை உத்தரவு

தேசிய கொடியை ஏற்றுவதில் கவனமுடன் இருக்க வேண்டும் - பள்ளிகளுக்கு , கல்வித்துறை உத்தரவு

சுதந்திர தினம் நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்படும். அந்தவகையில் தேசிய கொடியை ஏற்றும் நிகழ்ச்சியில் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் குறித்த சுற்றறிக்கையை, பள்ளிகளுக்கு கல்வித் துறை வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரித்து தேசிய கொடி ஏற்றி விழாவை கொண்டாடலாம்.


ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து விழாவில் பங்கு பெற செய்ய வேண்டும். பிளாஸ்டிக் வகையிலான தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது. மேலும், தேசிய கொடியை தலைகீழாகவோ, கிழிந்ததையோ ஏற்றக்கூடாது. தேசிய கொடியை ஏற்றுவதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews