அரசு பள்ளிக்கு திடீர் விசிட் அடித்து திருக்குறள் பாடம் எடுத்த நடிகர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட நடிகர்கள் அர்ஜுன், தம்பி ராமையா ஆகியோர் திடீரென அரசு பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். ராராபுரம் கிராமத்தில் அமைந்துள்ள திருவேட்டை அழகர் கோயில் ஆடி திருவிழாவில் நடிகர் அர்ஜுன், தம்பி ராமையா ஆகியோர் குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர், அருகிலிருந்த அரசு தொடக்கப் பள்ளிக்கு சென்ற அவர்களை மாணவ, மாணவியர் உற்சாகமாக வரவேற்றனர். நடிகர் அர்ஜுன் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் உமாபதி, அவருடைய அப்பா தம்பி ராமையா உடன் கோயிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
அதற்குப் பிறகு அர்ஜுன் குடும்பத்தினர் கோவில் பக்கத்தில் இருந்து அரசு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக சென்று இருக்கின்றனர். அங்கு தம்பி ராமையா, "இன்னாசெய் தாரை ஒருத்தல் அவர்நாண நன்னையஞ் செய்துவிடல்".. என்ற ஒரு திருக்குறள் சொல்லி குழந்தைகளுக்கு குட்டி கதை சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.