நேரடி பணி நியமனங்கள் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நேரடி நியமனம் அறிவிப்பு ரத்து
பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அமைச்சர்கள் எழுதிய கடிதத்தை தொடர்ந்து நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்தது மத்திய பணியாளர் தேர்வாணையம்
அரசுப் பணியில் இல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை நியமிக்கும் நேரடி நியமன முறையை பாஜக கொண்டு வந்தது
மத்திய அரசின் 24 அமைச்சகங்களில் 45 அதிகாரிகள் பணியிடங்களை நேரடி நியமனம் வாயிலாக நிரப்ப, ஆக. 17ம் தேதி யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது
உயர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க மோடி அரசு சதி செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் பணியில் நியமிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளும், தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசுத் துறைகளில் உயர் பதவிகளுக்கு நேரடித் தேர்வு முறை (லேட்ரல் என்ட்ரி) ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.