கோவை வேளாண் பல்கலையில் 700 பணியிடங்கள் இன்னும் காலி
-நமது நிருபர் -
தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந் தர் கீதாலட்சுமியின் பதவிக்காலம் வரும், 2025 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலை யில், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் பணியிடங் கள் பல நிரப்பப்படாமல் உள்ளன. விவசாயிகள் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பல்கலையில் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் பற்றாக்குறை பல விதமான பாதிப்புகளை ஏற் படுத்தியுள்ளது. இதற்கு காரணமாக, கடந்த பத்தாண்டுகளாக புதிய நியமனம் செய்யப்படாதது தான் கூறப்படு கிறது.இதனால், ஆராய்ச்சிப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் தெரிவிக்கின்ற னர். பல்கலையின் டீன் ஒருவர் கூறும்போது, 'துணைவேந்தர்களாக பொறுப்பு ஏற்பவர்கள், கடைசி வரை காரணம் மட்டுமே கூறி நழுவி விடுகின்றனர். மொத்தமுள்ள, 1,450 பணியிடங் களில், 700க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இன் னமும் காலியாகத் தான் இருக்கின்றன.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.