தமிழகம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர்கள் 57 பேர் பணியிட மாற்றம்
தமிழகம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர்கள் 57 பேரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளதாவது; தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணி விதிகளில் வகை 14/-ன் கீழ் வரும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிந்து வரும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி மாறுதல் வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.
மாறுதல் அளிக்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக்கல்வி அலுவலர்களால் நியமனம் செய்யப்படும் பொறுப்பு அலுவலர்களிடம் தமது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களுக்கு 38 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல ஒவ்வொரு மாவட்டங்களும் 2, 3 கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்று பணியாற்றி வருகின்றனர்.
தொடக்கக் கல்வி, இடைநிலை வாரியாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களில் 57 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.