‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் நேற்றிரவே உங்கள் வங்கிக் கணக்குளில் ரூ.1,000 வழங்க உத்தரவிட்டேன் - மு.க.ஸ்டாலின். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 09, 2024

Comments:0

‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் நேற்றிரவே உங்கள் வங்கிக் கணக்குளில் ரூ.1,000 வழங்க உத்தரவிட்டேன் - மு.க.ஸ்டாலின்.



‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் நேற்றிரவே உங்கள் வங்கிக் கணக்குளில் ரூ.1,000 வழங்க உத்தரவிட்டேன்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தை தொடங்கி வைக்க கோவைக்கு வந்துள்ளேன்-  கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கோவை மக்கள் அன்பான, பாசமான மக்கள்; தொழிற்துறையில் சிறந்த மண்டலம் கோவை.

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் இருக்கும் மண்டலம்; பழமையும், புதுமையும் கலந்த பகுதி கோவை.

கோவை பகுதி மக்கள் விருந்தோம்பல் உள்ளிட்ட நற்பண்புகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ‘தமிழ் புதல்வன்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

8 மற்றும் 10ம் வகுப்பு படிச்சு தொழிற் கல்வி மேற்கொள்ளும் மாணவர்களும் பயன் பெறலாம்.

3.28 லட்சம் மாணவர்கள் பயன் பெற ரூ.360 கோடி ஒதுக்கீடு-  கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

"தமிழ்புதல்வன்" திட்ட துவக்க விழா நிகழ்ச்சி - மாணவர்களுக்கு காண்பதற்கான நேரடி இணைப்பு - 09.08.2024

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட "தமிழ் புதல்வன்" எனும் மாபெரும் திட்டம் இந்த நிதியாண்டு முதல் அமல்படுத்திடும் வகையில் 09.08.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 09.08.2024 அன்று கோயம்புத்தூரில் நடைபெறும் "தமிழ்புதல்வன்" திட்ட துவக்க விழா நிகழ்ச்சியை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வாயிலாக காணும் வகையில் பள்ளிகளில் தக்க ஏற்பாடுகளை செய்யும் படி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. துவக்க விழா நிகழ்ச்சிகளை காணொலியில் காண்பதற்கான லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், துவக்க விழா நிகழ்ச்சியை கண்டு களித்த அறிக்கையை அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களின் பள்ளியில் இந்நிகழ்ச்சியை பார்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கையினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Form-இல் 09.08.2024 அன்று நண்பகலில் தவறாது உள்ளீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. காணொலிக்கான Link:

a href="https://youtu.be/Zgbw9Sht4us" target="_blank">https://youtu.be/Zgbw9Sht4us

Google Form-க்கான Link:

https://forms.gle/ToJ2eqXRdtAXriHx5

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews