மொபைல் மூலம் கண்காணிக்க & உங்களை கண்காணிப்பவர்களை தடுக்க எளிய வழி!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يوليو 06، 2024

Comments:0

மொபைல் மூலம் கண்காணிக்க & உங்களை கண்காணிப்பவர்களை தடுக்க எளிய வழி!!!



மொபைல் மூலம் கண்காணிக்க & உங்களை கண்காணிப்பவர்களை தடுக்க எளிய வழி!!!

உங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களை மொபைல் மூலம் கண்காணிப்பது எப்படி என்பது தெரியுமா? அது போல் உங்களை யாராவது கண்காணிக்கிறார்களா என்பதையும் தெரிந்து அதை தடுத்து நிறுத்துவதும் எளிது!

உங்களுக்கு தெரிந்தவர்களின் லோகேஷனை உங்கள் போனில் எளிதாக பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம். நான் சொல்லும் இந்த டிப்ஸை நல்ல காரியங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். தயவு செய்து தவறான காரியங்களுக்கு பயன்படுத்தாதீர்கள். கணவரோ, மனைவியோ தங்கள் ஜோடியின் பாதுகாப்பு கருதி எங்கெல்லாம் போகிறார்கள் என தெரிந்துகொள்ள விரும்பினால், அவர்கள் சம்மதத்தோடு போனை எடுங்கள். கூகுள் மேப் ஓபன் செய்யுங்கள். மேப் மேலே, வலது பக்கத்தில் மேப் பயன்படுத்துபவரின் மெயில் ஐடியின் முதல் எழுத்து இருக்கும். அதை கிளிக் செய்துவிடுங்கள். அதில் சில ஆப்ஷன்கள் வரும். அதில் Location sharing என்பதும் ஒன்று. அதை தொட்டுவிடுங்கள். அதில் Share location என்பதை கிளிக் செய்யுங்க. For 1 hour, until you turn this off என இரு ஆப்ஷன்கள் இருக்கும். அதில் until you turn this off என்ற ஆப்ஷனை தொட்டுவிடுங்கள். பிறகு அதை உங்கள் வாட்ஸ்அப், அல்லது மெயில் என எதற்கு வேண்டுமானாலும் அனுப்புங்கள். எப்போது தேவையோ அப்போது உங்கள் போனில் அந்த லிங்க்கை கிளிக் செய்தால் லோகேஷனை டிராக் செய்தபடியே இருக்க முடியும்.

இந்த வழிமுறையை பயன்படுத்தி உங்கள் லொகேஷனை யாராவது பார்க்கிறார்களா என்பதையும் கண்டறியலாம். location sharing என்ற ஆப்ஷனை கிளிக் செய்துவிடுங்கள். Sharing via link என்ற ஆப்ஷன் மூலமாக உங்கள் லொகேஷனை வேறு ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என தெரியும். ஒரு வேளை உங்கள் லொகேஷனை அவர் பார்க்கக் கூடாது என நினைத்தால் Sharing via link என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஸ்டாப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும். அதேநேரம், அனுமதி பெற்றிருந்தாலும், நண்பர்களோ, காதலியோ, மனைவி அல்லது கணவனோ.. அடுத்தவர்களை அதிகம் உளவு பார்ப்பது தப்பான எண்ணங்களுக்கு வழி வகுக்கும் என்பதையும், மன நிம்மதியை கெடுக்கும் என்பதையும் மறந்துவிடாதீர்கள் மக்களே. சந்தேகம் இருந்தால், போன வருடம் வெளியான லவ் டுடே படத்தை திரும்ப ஒருமுறை பார்த்துவிடுங்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة