அங்கன்வாடி மையங்களில் 50,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்... நிரப்ப நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يوليو 31، 2024

Comments:0

அங்கன்வாடி மையங்களில் 50,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்... நிரப்ப நடவடிக்கை



அங்கன்வாடி மையங்களில் 50,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்... நிரப்ப நடவடிக்கை

நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 50,000க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 1975ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 106வது பிறந்தநாளில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 6 வயது வரையிலான குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த திட்டத்தின் மைய நாடியாக அங்கன்வாடி மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ். 49,499 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4940 குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 54,439 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 13.9 லட்சமாக உள்ளன. ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திற்கும், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் ஆகிய இரண்டு பதவிகள் ஒப்பளிக்கப்பட்டுள்ளன. பயனாளிகளின் எண்ணிக்கை 150-300க்கும் கீழ் இருக்கும் குறு அங்கன்வாடி மையத்திற்கு ஒரே ஒரு அங்கன்வாடி பணியாளர் மட்டுமே நியமனம் செய்யப்படுகிறது.

முன்னதாக, அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியிடங்கள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிலளித்தார்.

அதன்படி, தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும், 49,499 உதவியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், 40,036 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு பதவிகளிலும் கிட்டத்தட்ட 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதேபோன்று, தேசிய அளவில், 1, 27,891 அங்கன்வாடி பணியாளர் இடங்களும், 1,14,287 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்ப்டாமல் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், பொது மாறுதல் மூலம் கலந்தாய்வு நடத்திட வேண்டும், பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சங்கங்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 50,000க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இருப்பினும், இத்தகைய ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பு எதையும் அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடவில்லை. அங்கன்வாடி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை தெரிந்து கொள்ள https://icds.tn.gov.in/icdstn/ என்ற இணையதளத்தில் பார்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற்னர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة