பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி 2024-25 பொதுமாறுதல் கலந்தாய்வு தொடக்கக்கல்வி துறைக்கு வழங்கியது போல் -எஞ்சிய காலிப்பணியிடங்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டுதல் சார்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 16, 2024

Comments:0

பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி 2024-25 பொதுமாறுதல் கலந்தாய்வு தொடக்கக்கல்வி துறைக்கு வழங்கியது போல் -எஞ்சிய காலிப்பணியிடங்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டுதல் சார்பு

DSE - பள்ளிக்கல்வித்துறையில் தொடக்கக்கல்வித்துறை போல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தவும் அதில் கூடுதல் தேவை பணியிடங்களை காட்டுதல்,மாவட்டம்-மாவட்டம் கலந்தாய்வில் சொந்த மாவட்ட காலிப்பணியிடங்களை தெரிவு செய்ய அனுமதிக்க தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் கோரிக்கை !!!

பொருள்

: பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி 2024-25 பொதுமாறுதல் கலந்தாய்வு தொடக்கக்கல்வி துறைக்கு வழங்கியது போல் -எஞ்சிய காலிப்பணியிடங்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டுதல் சார்பு பார்வை: தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். சென்னை-6 ந.க.எண்: 009839/டி1/2024 நாள்: 01.07.2024 வணக்கம். 2024-25 ம் ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மிகச்சிறப்பான முறையில் நடந்து வருகிறது.

பார்வை -1.இல் காணும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறையின் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் மீண்டும் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கவும், கலந்தாய்வில் பணி மாறுதல் பெறாத அனைவருக்கும் மீதி இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களில் அவரவர் வாய்ப்பு முடிந்த பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களை தெரிவு செய்ய இக்கலந்தாய்வில் அனுமதி வழங்கப்படவில்லை. கணவன்-மனைவி முன்னுரிமையை ஒருமுறை பயன்படுத்துபவர்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு அதே முன்னுரிமையை பயன்படுத்த தடை உள்ளதுபோல், மற்ற முன்னுரிமை மூலம் பணிமாறுதல் பெற்றவர்களுக்கு இத்தடை இல்லாததால் அவர்கள் மீண்டும் மீண்டும் முன்னுரிமை சலுகை பெற்று மாறுதல் பெற்ற வண்ணம் உள்ளனர். இதனால் பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆகவே, முதல் கட்ட கலந்தாய்வு முடிவின் அடிப்படையில் உள்ள காலிப்பணியிடங்களுடன், அனைத்து கூடுதல் தேவைப் பணியிடங்களையும் இடம்பெறச் செய்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தவும் இதில் மீதம் உள்ள இடங்களுக்கு புதிய நியமனம் செய்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews