தமிழக பள்ளிக்கல்வி துறை சாதனை - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يونيو 01، 2024

Comments:0

தமிழக பள்ளிக்கல்வி துறை சாதனை - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்



தமிழக பள்ளிக்கல்வி துறை சாதனை - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் Tamil Nadu School Education Department Achievement - Chief Minister Stalin's pride

“நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் தொடக்கம் தான் இது” என பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறைகள், புதிய திட்டங்களின் சாதனைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை சாதனைகள், நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் குறி்த்த விவரங்கள் வெளியிடப்பட்டன. இவற்றை சுட்டிக்காட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளி கிழமை) தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: “திராவிட மாடல் அரசின் மூனறே ஆண்டுகளில் தமிழகத்தின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் 20,332 பள்ளிகளில் இணையதள வசதி, ரூ.519.73 கோடியில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள், புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்களால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு. நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் தொடக்கம் தான் இது. பயணத்தை தொடர்வோம். தமிழகத்தை உயர்த்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة