இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியீடு: 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يونيو 05، 2024

Comments:0

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியீடு: 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை



இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியீடு: 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை - NEET Result Release for Undergraduate Medical Course: 67 students achieved full marks

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் 13.16 லட்சம் பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய அளவில் தமிழகத்தில் 8 பேர் உட்பட67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். நம்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும்நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப் படுகிறது.

அதேபோல், ராணுவ நர்சிங்கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங்படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 23 லட்சத்து33,297 பேர் எழுதினர். தமிழகத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தேர்ச்சி விகிதம் உயர்வு:

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியாகின. நாடு முழுவதும் மொத்தம் 13 லட்சத்து 16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தாண்டு ஒரு லட்சத்து52,920 பேர் தேர்வு எழுதியதில் 89,426 (58.47%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது தேர்வுஎழுதியவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2023-ல் 1,44,514பேர் தேர்வு எழுதியதில் 78,693 (54.45%) பேர் தேர்ச்சிபெற்றனர். தமிழக மாணவர்கள் முதலிடம்: நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நீட் தேர்வில் மாஸ் காட்டிய தமிழக மாணவர்கள்.

67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை..!

கடந்த ஆண்டு மே ஐந்தாம் தேதியன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET_UG) நடைபெற்றது.

அதன் நுழைவு தேர்வை இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று மாலை தேர்வாணையம் வெளியிட்டது.

அதில், 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 56.41% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது கடந்த ஆண்டு விட 0.2% அதிகமாகும். தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில், 89 ஆயிரத்து 426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர்.

அதில், முதலில் தமிழகத்தில் தேர்வது ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 920 மாணவர்கள் மாணவர்களில் 89 ஆயிரத்து 426 (58.47 சதவீதம்) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்தி 514 பேர் தேர்வு எழுதி அதில், 78 ஆயிரத்தி 693 (54.45 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அடுத்ததாக இந்த ஆண்டு வெளியான முடிவுகளில் நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதில், தமிழகத்தில் மட்டும் எட்டு மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதன் மூலம் இந்திய அளவில் ராஜஸ்தானுக்கு 11 மாணவர்கள் பிறகு தமிழகம் இரண்டாம் இடம் பிடித்த சாதனை படைத்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة