9 லட்சம் போ் எழுதிய NET தோ்வு ரத்து: UGC அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 20, 2024

Comments:0

9 லட்சம் போ் எழுதிய NET தோ்வு ரத்து: UGC அறிவிப்பு



9 லட்சம் போ் எழுதிய ‘நெட்’ தோ்வு ரத்து: யுஜிசி அறிவிப்பு

நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் அதிகமானோா் கடந்த செவ்வாய்க்கிழமை எழுதிய தேசிய தகுதித் தோ்வு (நெட்) ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.

தோ்வில் முறைகேடு நடந்திருப்பதாக இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய இணைய குற்ற அச்சுறுத்தல் ஆய்வுப் பிரிவு அளித்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை யுஜிசி மேற்கொண்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடத்துக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் நெட் தோ்வு நடத்தப்படுகிறது.

நிகழாண்டுக்கான தோ்வு, நேரடி எழுத்துத் தோ்வு முறையில் கடந்த செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் 317 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 1,205 தோ்வு மையங்களில் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டது. இதில் 9,08,580 போ் பங்கேற்றனா்.

இந்த நிலையில், இந்தத் தோ்வு ரத்து செய்யப்படுவதாக யுஜிசி அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல் யுஜிசி மற்றும் மத்திய கல்வி அமைச்சக எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘தேசிய இணைய குற்ற அச்சுறுத்தல் ஆய்வுப் பிரிவு அளித்த தகவலின் அடிப்படையில், நெட் தோ்வில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, ஜூன் 18-ஆம் தேதி நடத்தப்பட்ட நெட் தோ்வு ரத்து செய்யப்படுகிறது. இத் தோ்வு புதிதாக மீண்டும் நடத்தப்படும். இதுகுறித்த அறிவிப்பு தனியாக வெளியிடப்படும்.

அதே வேளையில், தோ்வு முறைகேடு புகாா் தொடா்பான விசாரணை மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சிபிஐ) ஒப்படைக்கப்பட உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. UGC NET தேர்வில் முறைகேடு அம்பலம்.

வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் தேர்வை ரத்து செய்வதாக அறிவிப்பு.

நேற்று முன்தினம் (ஜூன் 18) நாடு முழுவதும் நடைபெற்ற UGC NET தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்பு.

தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தேசிய சைபர் குற்றப் பிரிவில் இருந்து தகவல் வந்ததையடுத்து நடவடிக்கை.

புதிய தேர்வுக்கான தேதி தனித் தனியாக பகிரப்படும் எனவும், இந்த முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews