பெறுநர் :
தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் அவர்கள்
பேராசிரியர் க.அன்பழகனார் வளாகம், சென்னை
பொருள் :
தொடக்கக்கல்வித்துறையில் 243 அரசு ஆணை வரவேற்று அதில் பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வில் திருத்தம் செய்து ஒன்றியத்திற்குள்ளும் கலந்தாய்வு நடத்த கோருதல் சார்ந்து.
மதிப்புமிகு ஐயா அவர்களுக்கு வணக்கம் !
தொடக்கக்கல்வித்துறையில் அரசு ஆணை 243 என்பது இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் , தொடக்கப்பள்ளி ,நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள மாநில பணிமூப்பு அடிப்படையில் நடத்தப்படும் என்று அறிவித்து அதற்கான அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளது இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பெரிதும் வரவேற்கிறது
மேலும் மாநில முன்னுரிமை அடிப.படையாக கொண்டு பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு நட்த்தினால் ஆசிரியர்களுக்கு மாநிலத்தில் அவர்கள் விரும்பும் இடத்திற்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பெறும் வாய்வ்ப்பு ஏற்படும் 243 ஆணை ஆசிரியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் ,ஏற்கனவே உள்ள நடைமுறையில் ஒன்றியத்திற்குள்ளேயே அடைப்பட்டு கிடக்கின்ற ஒருநிலை இணைந்து வருகிறது ஆனால் 243 ஆணையில் அப்படி இல்லை என்பதை நாங்கள் அறிகிறோம், ஒரே ஒரு குறை ஒன்றியத்திற்குள் நடத்தாமல் மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது மட்டுமே, அதனை சரி செய்து ஒன்றியத்திற்குள் பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் .
உயர்நிலை மேல்நிலை பள்ளிகளை போன்று மாவட்டத்திற்குள்ளும் அதன் பின் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம் அது சாத்தியமானதும் கூட ஏன் என்றால் வட்டார அலுவலரின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படவில்லை
ஆனால் தொடக்கக்கல்வித்துறையில் அப்படி இல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் வட்டார கல்வி அலுவரின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுகிறது ஆதலால் மாநில அளவில் பணிமூப்பு பட்டியலை தயாரித்து அதன் அடிப்படையிலேயே பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்தவேண்டும் பள்ளிக்கல்வித்துறையை போன்று மாவட்டத்திற்குள் அதன் பின் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்தாமல் , 243 ஆணையில திருத்தம் செய்து ஒன்றியத்திற்குள் அதன்பின் மாவட்டத்திற்குள் கடைசியாக மாவட்டம் விட்டு நடத்தினால் தான் ஆசிரியர்கள் பெரிதும் பயன்பெறுவர் என்பதை ஐயா அவர்களுக்கு தெரிவித்துக்கொண்டு 243 ஆணையில் திருத்தம் செய்து ஒன்றிய அளவிலும் கலந்தாய்வை நடத்த வழிவகைசெய்து பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த ஐயா அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
بحث هذه المدونة الإلكترونية
الجمعة، يونيو 28، 2024
Comments:0
Home
ASSOCIATION
தொடக்கக்கல்வித்துறையில் 243 அரசு ஆணை வரவேற்று அதில் பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வில் திருத்தம் செய்து ஒன்றியத்திற்குள்ளும் கலந்தாய்வு நடத்த கோருதல் சார்ந்த
தொடக்கக்கல்வித்துறையில் 243 அரசு ஆணை வரவேற்று அதில் பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வில் திருத்தம் செய்து ஒன்றியத்திற்குள்ளும் கலந்தாய்வு நடத்த கோருதல் சார்ந்த
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.