1 கோடி பள்ளி மாணவர் விபரம் OTP., வாயிலாக சரிபார்ப்பு
அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, ஒரு கோடி மாணவர்களின் மொபைல் போன் எண்ணின் உண்மைத்தன்மை, ஓ.டி.பி., வழியே சரிபார்க்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும், மாணவர்களுக்கான தகவல்கள், அறிவிப்புகளை, பெற்றோரும் தெரிந்து கொள்ளும் வகையில், 'வாட்ஸாப்' வழி செய்தி அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் செயல்படும் மற்ற பாடத்திட்ட மாணவர்களுக்கும், அரசின் அறிவிப்புகளை மொபைல் போனில் தெரிவிக்க உள்ளது.
இதற்காக, அனைத்து வகை பள்ளிகளின் மாணவ - மாணவியரின் பெற்றோர் பயன்படுத்தும் மொபைல் போன் எண் பதிவு செய்யப்பட்டது. இந்த எண்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், ஓ.டி.பி., அனுப்பி, மொபைல் போன் எண்களை சரிபார்க்கும் பணி ஒரு மாதமாக நடந்தது.
இதன்படி, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 34.34 லட்சம் மாணவர்;
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 26.50 லட்சம் மாணவர்;
தனியார் சுயநிதி பள்ளிகளில் 38.26 லட்சம் மாணவர்களின் மொபைல் போன் எண்களுக்கு,ஓ.டி.பி., என்ற ஒரு முறை கடவுச்சொல் அனுப்பி, விபரங்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ., சைனிக் மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளின் மாணவர்கள், 15,000 பேரின் மொபைல் போன் எண்ணும் சரிபார்க்கப்பட்டுஉள்ளது.
இன்னும் 28 லட்சம் மாணவர்களின் விபரங்களை, மொபைல் போன் ஓ.டி.பி., வழியே சரிபார்க்க வேண்டியுள்ளதாகவும், இதில் சிலர் ஓ.டி.பி., பகிராமல் உள்ளதாகவும், சிலரிடம் போன் எண் மாறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.